பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்வு


பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்வு
x
தினத்தந்தி 6 Oct 2018 1:58 AM GMT (Updated: 6 Oct 2018 1:58 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத்துவங்கியுள்ளது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்று அச்சம் ஏற்பட்டது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கடும் அதிருப்தியை அளித்த நிலையில், விலை குறைக்கும் முயற்சியாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ரூ.2.50 குறைத்தது. மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து மக்களின் சுமையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதன்படி, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. 

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணைய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ரூ.84.99 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.77.42 க்கும் விற்பனையாகிறது. 


Next Story