நான் தலைவர் ஆக மாட்டேன், நல்ல தலைவர்களை உருவாக்குவேன் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேச்சு


நான் தலைவர் ஆக மாட்டேன், நல்ல தலைவர்களை உருவாக்குவேன் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேச்சு
x
தினத்தந்தி 7 Oct 2018 2:55 PM GMT (Updated: 7 Oct 2018 2:55 PM GMT)

நான் தலைவர் ஆக மாட்டேன், நல்ல தலைவர்களை உருவாக்குவேன் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடியில் மக்கள் பாதை அமைப்பு சார்பில் தமிழ் கையெழுத்து திருவிழாவை தொடங்கி வைத்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசியதாவது: 

தாய்மொழி கல்வி நம்மிடமிருந்து விலகிப்போவதை வேதனையோடு பார்க்க வேண்டியுள்ளது. தமிழ்வழி கல்வியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு என்பது உண்மை. அரசுக்கு தமிழ் மொழி கல்வியை காப்பாற்றும் கடமை உள்ளது.

நான் தலைவர் ஆக மாட்டேன், நல்ல தலைவர்களை உருவாக்குவேன். அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான ஆங்கிலம் மக்கள் பாதை அமைப்பு முலம் கற்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story