தங்கம் விலை பவுனுக்கு ரூ.216 குறைந்தது ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 981-க்கு விற்பனை


தங்கம் விலை பவுனுக்கு ரூ.216 குறைந்தது ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 981-க்கு விற்பனை
x
தினத்தந்தி 8 Oct 2018 9:30 PM GMT (Updated: 8 Oct 2018 8:32 PM GMT)

சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.216 விலை குறைந்தது.

சென்னை,

சென்னையில் நேற்றுமுன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 8-க்கும், பவுன் ரூ.24 ஆயிரத்து 64-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் நேற்று கிராமுக்கு ரூ.27-ம், பவுனுக்கு ரூ.216-ம் விலை குறைந்தது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 981-க்கும், பவுன் ரூ.23 ஆயிரத்து 848-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலையை போன்றே வெள்ளி விலையிலும் குறைவு காணப்பட்டது. அதாவது, சென்னையில் நேற்றுமுன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.41.90-க்கும், கிலோ ரூ.41 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆனது.

நேற்று கிராமுக்கு 50 காசும், கிலோவுக்கு 500 ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.40-க்கும், கிலோ ரூ.41 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Next Story