திருவண்ணாமலை தீபத்திருநாளில் மலையின் மீது ஏற 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி


திருவண்ணாமலை தீபத்திருநாளில் மலையின் மீது ஏற 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
x
தினத்தந்தி 22 Oct 2018 1:13 PM GMT (Updated: 22 Oct 2018 1:13 PM GMT)

திருவண்ணாமலை தீபத்திருநாளில் மலையின் மீது ஏற 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழா, ஆடி பிரம்மோற்சவம், ஆனி பிரம்மோற்சவம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

தீபத் திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற நவம்பர் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவின் போது திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கபடுவார்கள்.

இந்தநிலையில்,  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாளில் மலையின் மீது ஏற 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Next Story