நெல்லை பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார் உயர்மட்ட குழு அமைத்து விசாரணை


நெல்லை பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார் உயர்மட்ட குழு அமைத்து விசாரணை
x
தினத்தந்தி 24 Oct 2018 10:00 PM GMT (Updated: 24 Oct 2018 9:07 PM GMT)

நெல்லை பல்கலைக்கழக பேராசிரியர் மீது கூறப்பட்ட பாலியல் புகார் குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடக்கிறது.

பேட்டை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல்துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜூ. இவர், கல்லூரி வளர்ச்சி குழு தலைவராகவும் உள்ளார். இவர் ஒரு ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவர் சங்கம் சார்பில் ஒரு செல்போன் உரையாடல் அடங்கிய ஆடியோ சி.டி. மற்றும் புகார் மனு பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் பதிவாளர் சந்தோஷ் பாபு உள்ளிட்ட முக்கிய துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து துணைவேந்தர் பாஸ்கர் உத்தரவின்பேரில் இந்த புகார் குறித்து விசாரிக்க ஒரு உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பேராசிரியர் கோவிந்தராஜூ மற்றும் அந்த ஆராய்ச்சி மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story