18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம் : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ரத்தினசபாபதி


18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம் : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ரத்தினசபாபதி
x
தினத்தந்தி 25 Oct 2018 4:19 AM GMT (Updated: 25 Oct 2018 4:19 AM GMT)

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தெரிவித்தார்.

நெல்லை,

முதல் அமைச்சர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்.எல்.ஏக்களை சபாநாயர் தனபால் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்தார். தகுதி நீக்கத்தை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு  நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த ஜூன் 14 ஆம் தேதி மாறுபட்ட தீர்ப்பு அளித்தது. 

இதையடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது.  அதன்படி மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழக்கை விசாரித்து வந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி தீர்ப்பு அளிக்கிறார். இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான், தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என்பதால், இந்த தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, ”18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். தீர்ப்பு எப்படி வந்தாலும் அரசுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும்.  தீர்ப்புக்கு பின் தினகரன் பின்னால் அதிமுகவினர் அணிவகுப்பார்கள்” என்றார். 


Next Story