18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எங்களுக்கு எந்தவித பின்னடைவும் இல்லை - டிடிவி தினகரன்


18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு  எங்களுக்கு எந்தவித பின்னடைவும் இல்லை - டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 25 Oct 2018 5:23 AM GMT (Updated: 25 Oct 2018 5:23 AM GMT)

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற 3-வது நீதிபதி தீர்ப்பு எங்களுக்கு எந்தவித பின்னடைவும் இல்லை என அம்மா முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

சென்னை, 

 தீர்ப்பு குறித்து அம்மா முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் கூறியதாவது;-

அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே.  தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏக்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள். இன்று மாலை குற்றாலம் சென்று 18 பேருடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என கூறினார். 

Next Story