தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2018 9:17 AM GMT (Updated: 26 Oct 2018 9:37 AM GMT)

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

தீபாவளி பண்டிகையொட்டி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக  ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை என 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக  தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறபட்டு இருப்பதாவது:-

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீபாவளித் திருநாளை சிறப்புடன் கொண்டாடிட ஏதுவாக, இந்த ஆண்டிற்கான (2017-18) போனஸ் மற்றும் கருணைத் தொகையினை வழங்கிட மாண்புமிகு அம்மாவின் தலைமையில் நல்லாட்சி செய்துவரும் மாண்புமிகு தமிடிநநாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தகுதிவாய்ந்த ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 45 தொழிலாளர்கள் (6,416 பதிலி பணியாளர்கள் உட்பட) மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை ஆக மொத்தம் 20 விழுக்காடு வழங்கிட மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அரசு 215 கோடியே 99 இலட்சம் ரூபாயினை ஒதுக்கியுள்ளது.

மேலும், தொடர்ந்து வரும் டீசல் விலை ஏற்றத்தால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தினை ஈடுசெய்கின்ற வகையில், அரசின் சார்பில் வழங்கப்பட்டு வந்த மானியத்தினை மாதந்தோறும் தொடர்ந்து வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில், கடந்த 20.01.2018 முதல் 30.09.2018 வரையிலான காலத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினை ஈடுசெய்யும் பொருட்டு 198 கோடியே 66 இலட்சம் ரூபாயினை மானியமாக இந்த அரசு வழங்கியுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து கடும் நிதிநெருக்கடியினை சந்தித்து வருவதால், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் பணப் பயன்களை வழங்கிடஇயலாத நிலையிலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த டிசம்பர்-2017 முதல் மார்ச்-2018 வரையில், நிலுவையிலுள்ள பணப்பயன்களை வழங்கிடும் பொருட்டு, 251 கோடியே 2 இலட்சம் ரூபாயினையும், தொழிலாளர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை உள்ள மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அரசு வழங்கியுள்ளது.

இதன் பயனாக, 1,113 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதியும்,1,576 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடையும், 1,837 ஓய்வுபெற்றதொழிலாளர்களுக்கு ஈட்டியவிடுப்பு தொகையும், 714 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையும் வழங்கப்படுவதாடு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீடிந, 118 ஓய்வுபெற்ற பயனாளிகளும் பயன்பெறுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  

Next Story