காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அலட்சியம் வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அலட்சியம் வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 26 Oct 2018 11:31 AM GMT (Updated: 26 Oct 2018 11:31 AM GMT)

காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அலட்சியம் வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காய்ச்சல் பாதிப்பால் எழும்பூர் அரசு மருத்துவமனையில் 63 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு அதிக அளவில் நீர்ச்சத்துமிக்க உணவுகளை கொடுக்க வேண்டும்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அளிக்க வேண்டாம் குழந்தைகளுக்கு இந்தாண்டு அதிகளவில் டெங்கு பாதிப்பு உள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 19பேர் டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அலட்சியம் வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story