தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவ.5ம் தேதி அரசு விடுமுறை


தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவ.5ம் தேதி அரசு விடுமுறை
x
தினத்தந்தி 29 Oct 2018 2:32 PM GMT (Updated: 29 Oct 2018 2:32 PM GMT)

தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிக்கைக்காக தங்களது சொந்த ஊருக்கு சென்று மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. நவம்பர் 5-ம் தேதிக்கு பதிலாக நவ.10-ம் தேதி பணி நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Next Story