முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், ஸ்டாலின் மரியாதை


முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், ஸ்டாலின்  மரியாதை
x
தினத்தந்தி 30 Oct 2018 6:16 AM GMT (Updated: 30 Oct 2018 6:16 AM GMT)

முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர், ஸ்டாலின், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன், தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

சென்னை 

அக்டோபர் 30-ந்தேதி இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா. தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைக்க நேதாஜிக்கு துணை நின்றவர், மேலும் நேதாஜி அமைத்த போர் குழுவில் இடம்பெற்றவர்.

முத்துராமலிங்கத் தேவரின் 111வது ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர்- துணை முதலவர்  மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் 

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111வது ஜெயந்திவிழவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு, அமைச்சர் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன்  உள்ளிட்டோர் மரியாதை மாலை அணிவித்து செலுத்தினர். 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111வது ஜெயந்திவிழவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மறியாதை செலுத்தினார்.

Next Story