பேனர்கள் கிழிக்கப்பட்ட விவகாரம்: தினகரன் -நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக புகார்


பேனர்கள் கிழிக்கப்பட்ட விவகாரம்:  தினகரன் -நிர்வாகிகள்  மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக புகார்
x
தினத்தந்தி 31 Oct 2018 11:18 AM GMT (Updated: 31 Oct 2018 11:18 AM GMT)

பேனர்கள் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் தினகரன் மற்றும் அமமுக நிர்வாகிகள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக புகார் அளித்து உள்ளது.

கமுதி

பசும்பொன்னில் முத்துராமலிங் தேவர் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த டி.டி.வி. தினகரன் வருகை தந்தார். அவருடன் அமமுக தொண்டர்களும் நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக சென்றனர். அப்போது தேவர் நினைவிடம் அருகே அ.தி.மு.க சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அ.ம.மு.கவினர் கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். தினகரன் முன்னிலையிலேயே பெரிய கம்புகளை கொண்டு அ.தி.மு.க பேனர்கள் மற்றும் கொடிகளை அ.ம.மு.கவினர் சேதப்படுத்தினர்.

அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தினகரன் மற்றும் அமமுக நிர்வாகிகள்  2 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கமுதி காவல் நிலையத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி புகார் அளித்து உள்ளார்.

Next Story