நிர்மலாதேவி பரபரப்பு குற்றச்சாட்டு: ”எந்தத் தவறும் செய்யவில்லை” மறுக்கும் முருகன், கருப்பசாமி


நிர்மலாதேவி பரபரப்பு குற்றச்சாட்டு: ”எந்தத் தவறும் செய்யவில்லை” மறுக்கும் முருகன், கருப்பசாமி
x
தினத்தந்தி 31 Oct 2018 1:47 PM GMT (Updated: 31 Oct 2018 1:47 PM GMT)

நிர்மலாதேவி தங்களை பற்றி கூறியது அனைத்தும் பொய் என முருகன், கருப்பசாமி மறுத்துள்ளனர்.

சென்னை,

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் 2-வது பகுதி இன்றைய தினத்தந்தியில் வெளியாகியுள்ளது. அதில்  எனக்கு யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது “மாணவிகள் வேண்டும் என்று கேட்டது முருகனும், கருப்பசாமியும் தான்” என போலீசில் நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

இந்தநிலையில், பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் மதுரை மத்திய சிறையில் இருந்து  ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், நிர்மலா தேவி தங்களை பற்றி கூறியது அனைத்தும் பொய் எனவும் தெரிவித்தனர். 

Next Story