தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படை


தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படை
x
தினத்தந்தி 5 Nov 2018 2:55 PM GMT (Updated: 5 Nov 2018 2:57 PM GMT)

தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க சுமார் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க சுமார் 500  தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவு படி, தீபாவளி நாளில், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம்.

எனவே, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்குமாறு, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மீறினால், 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  

Next Story