தமிழக மக்கள் வாழ்வில் அளவிலா வளமும், நலமும் சேர்ந்திட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து


தமிழக மக்கள் வாழ்வில் அளவிலா வளமும், நலமும் சேர்ந்திட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து
x
தினத்தந்தி 5 Nov 2018 9:30 PM GMT (Updated: 5 Nov 2018 6:40 PM GMT)

தமிழக மக்கள் வாழ்வில் அளவிலா வளமும், நலமும் சேர்ந்திட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தீமை அகன்று, நன்மை பிறக்கும் நன்னாளை தீபங்கள் ஏற்றி வரவேற்றுக் கொண்டாடும் இனிய திருவிழாவான தீபாவளி திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் உவந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தீபாவளி திருவிழா என்பது, அதிகாலை எழுந்து எண்ணெய்க் குளியலிட்டு, புத்தாடை உடுத்தி, பெரியவர்களை வணங்கி, விளக்குகளால் வீடுகளை அலங்கரித்து, வெடிகள் வெடித்து கொண்டாடுவதுடன், அன்பு பரிசுகளோடு, மனமகிழ்ச்சியையும் ஒருவருக்கொருவர் ஒரு சேர பகிர்ந்து பரிமாறிக்கொள்ளும் மகிழ்ச்சி திருவிழா ஆகும்.

ஒளி என்பது வெற்றியின் சின்னம். இருள் என்பது தோல்வியின் அடையாளம். தீபங்கள் ஏற்றி, இருளை அகற்றி ஒளி வெள்ளம் பெருகச் செய்யும் இத்தீபாவளித் திருநாளில் தோல்வியை துடைத்தெறிந்து வெற்றிக்கு வழிகாட்டி தமிழக மக்களின் வாழ்வில் அளவிலா வளமும் நலமும் சேர்ந்திட எனது இனிய வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கி கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story