சென்னையில் கடந்தாண்டை விட பட்டாசு காற்று மாசு குறைந்துள்ளது - இன்று காலை அதிகம்


சென்னையில் கடந்தாண்டை விட பட்டாசு காற்று மாசு குறைந்துள்ளது - இன்று காலை அதிகம்
x
தினத்தந்தி 7 Nov 2018 4:40 AM GMT (Updated: 7 Nov 2018 4:40 AM GMT)

சென்னையில் கடந்தாண்டை விட பட்டாசு காற்று மாசு குறைந்துள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!


சென்னை 

ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினாலும் 2018ல் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை வரலாற்றில் இடம்பிடித்து விட்டது. காற்று மாசை குறைப்பதற்காக இந்த ஆண்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசும் ஆணை போட்டது. இதனால் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருமே வருத்தம் அடைந்தனர்.

சென்னை நகரம் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை வானில் வண்ண வண்ண நிறங்களில் ஒளிகள் மின்னின. அந்த 1 மணி நேரத்தில் ஏராளமான புகையும் காணப்பட்டது .

ராசிபுரத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் 40 வயது சித்தேஸ்வர பிரபு என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். திருவிடைமருதூர் அருகே மருதாநல்லூரில் 27 வயது சுபாஷ், 36 வயது ராஜவேல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்  உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை - 97, கடலூர் - 13, விழுப்புரம் - 255, நாமக்கல் - 7, ஈரோடு - 7, தஞ்சை - 10, சேலம் - 50, கொடைக்கானல் - 2, வேலூர் - 2, நெல்லை - 31, விருதுநகர் - 80, கோவை - 85, திருப்பூர் - 57, அரியலூர் - 14 என இதுவரை 900 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால், சென்னையில்  காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில், காற்று மாசு 65 குறியீடாக பதிவாகியிருப்பதாகவும், டெல்லியில் சராசரி காற்று மாசு 349 குறியீடு என  மிகவும் அபாய அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.  ஆனால் சென்னையில் இன்று காலை அதன் அளவு 134 ஆக உயர்ந்து உள்ளது

சென்னையில் சாதாரண அளவில் காற்று மாசு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆக்ராவில் 353 என்ற அளவில் காற்று மாசு உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காற்று மாசு  குறியீடு 87 ஆக உள்ளது. வட மாநிலங்களை விட சென்னையில் மிகவும் குறைந்த அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது. 

Next Story