கஜா புயல் பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமரிடம், முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும் - கமல்ஹாசன்


கஜா புயல் பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமரிடம், முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:09 AM GMT (Updated: 22 Nov 2018 4:18 AM GMT)

கஜா புயல் பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமரிடம், முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இன்று  ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக, அவர் திருச்சி சென்றுள்ளார். 

இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

கஜா புயல் பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமரிடம், முதல்வர் வலியுறுத்த வேண்டும். நிவாரண உதவி போதுமானதாக இல்லை, உயிரிழப்புக்கு குறைந்தது ரூ.20 லட்சம் தர வேண்டும். தென்னைக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story