சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது ஆட்டுக்கறி தான்: ஆய்வு முடிவில் தகவல்


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது ஆட்டுக்கறி தான்: ஆய்வு முடிவில் தகவல்
x
தினத்தந்தி 22 Nov 2018 8:14 AM GMT (Updated: 22 Nov 2018 8:23 AM GMT)

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டுக்கறிதான்; நாய்க்கறி அல்ல என்று சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 17-ந்தேதி, ராஜஸ்தானில் இருந்து வந்த ரெயிலில் 2 ஆயிரத்து 190 கிலோ கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது நாய் இறைச்சி என்று கூறப்பட்டது. இது சென்னை மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இந்த கெட்டுப்போன இறைச்சி ஜோத்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஏற்றப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ரெயில்வே வாரியம் சார்பில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. ஆனால் இந்த இறைச்சியை அனுப்பியவரின் பெயரும், அது சென்று சேர வேண்டிய முகவரியும் தெளிவாக குறிப்பிடாததால் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறி என புகார் எழுந்ததால் ஆய்வு நடத்தப்பட்டது. சென்னை எழும்பூரில் ஜோத்பூர் விரைவு ரயிலில் வந்தது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறிதான்  என ஆய்வில் உறுதியானது. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்களின் ஆய்வில் ஆட்டுக்கறி என்பது உறுதியானது. பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சி சிறிய ஆடு வகையை சேர்ந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story