திருவண்ணாமலை அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றம்: மாலை 6 மணிக்கு மலையின் உச்சியில் மகா தீபம்


திருவண்ணாமலை அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றம்: மாலை 6 மணிக்கு மலையின் உச்சியில் மகா தீபம்
x
தினத்தந்தி 23 Nov 2018 2:38 AM GMT (Updated: 23 Nov 2018 2:38 AM GMT)

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

சென்னை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தின மும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். விழாவின் ஆறாம் நாளான 19ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 20ஆம் தேதி பெரிய தேரோட்டமும் நடைபெற்றன.

இந்நிலையில், இன்று அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.பின்னர் அண்ணாமலையார் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து, உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் இன்று  மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் கோவிலில் பரணி ஏற்றப்படுகிறது. மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண, சுமார் 25 லட்சம் பக்தர்களுக்கு மேல் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. 

Next Story