கஜா நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க முதல் அமைச்சர் கோரிக்கை


கஜா நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க முதல் அமைச்சர் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2018 8:34 AM GMT (Updated: 23 Nov 2018 8:34 AM GMT)

கஜா நிவாரணப் பொருட்களுக்கு ரயிலில் சரக்குக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க ரெயில்வே அமைச்சர் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

கஜா நிவாரணப் பொருட்களுக்கு  சரக்கு கட்டணத்தில்  இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை வைத்து  முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ரெயிலில் அனுப்பப்படும்  நிவாரணப் பொருட்களுக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும். ஆட்சியாளர்களுக்கு நன்கொடையாளர்கள் ரெயிலில் அனுப்பும் நிவாரண பொருட்களுக்கு கட்டண விலக்கு வேண்டும். கேரள  வெள்ளத்தின் போது  ரெயில் கட்டணத்தில் விலக்கு அளித்தது போல் தமிழகத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டும்  என கடிதத்தில் கூறி உள்ளார்.

Next Story