கஜா புயல் பாதிப்புக்கு சிறுசேமிப்பு தொகை ரூ.4,720 வழங்கிய பள்ளிக்குழந்தைகள்


கஜா புயல் பாதிப்புக்கு சிறுசேமிப்பு தொகை ரூ.4,720 வழங்கிய பள்ளிக்குழந்தைகள்
x
தினத்தந்தி 23 Nov 2018 2:01 PM GMT (Updated: 23 Nov 2018 2:01 PM GMT)

கஜா புயல் பாதிப்புக்கு சிறுசேமிப்பு தொகை ரூ.4,720-ஐ பள்ளிக்குழந்தைகள் வழங்கியுள்ளனர்.
நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிறுவனங்கள், திரையுலகினர் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கஜா புயல் நிவாரணமாக, சிறுக சிறுக தாங்கள் சேர்த்த பணத்தை அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் நிவாரணமாக வழங்கியுள்ளது பல்வேறு தரப்பினரையும், நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.  

புதுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையாக தலைமையாசிரியையிடம் வழங்கினர். 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 4 ஆயிரத்து 720 ரூபாயை நிவாரணமாக வழங்கியுள்ளனர். மாணவர்களுக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர். 

Next Story