திருவாரூர்: மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


திருவாரூர்: மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
x
தினத்தந்தி 25 Nov 2018 2:43 PM GMT (Updated: 25 Nov 2018 2:43 PM GMT)

புயல் சீரமைப்பு பணி காரணமாக, மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.

சென்னை,

கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனால் குடிநீர் வினியோகம் உள்பட அடிப்படை தேவைகள் பாதிக்கப்பட்டது. இதனை தொடந்து மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

கஜா புயலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்குள் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று விடிய, விடிய கன மழை பெய்தது. கனமழை பெய்ததால் பொதுமக்கள் பொதுமக்களின இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், முத்துப்பேட்டை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.

Next Story