மதுரையில் எய்ம்ஸ் அமைய டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கும்; அமைச்சர் விஜயபாஸ்கர்


மதுரையில் எய்ம்ஸ் அமைய டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கும்; அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 27 Nov 2018 8:59 AM GMT (Updated: 27 Nov 2018 8:59 AM GMT)

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு டிசம்பர் முதல் வாரத்தில் ஒப்புதல் அளிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது என டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலத்துக்கான தேசிய விருதை 4வது முறையாக தமிழகம் பெற்றுள்ளது.  இந்த விருதினை பெறுவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லிக்கு சென்றுள்ளார்.  அவர் தமிழக அரசு சார்பில் டெல்லியில் விருதை பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு டிசம்பர் முதல் வாரத்தில் ஒப்புதல் அளிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Next Story