நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பயங்கரம் காதலிக்க மறுத்த பெண் குத்திக்கொலை


நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பயங்கரம் காதலிக்க மறுத்த பெண் குத்திக்கொலை
x
தினத்தந்தி 27 Nov 2018 2:32 PM GMT (Updated: 27 Nov 2018 2:32 PM GMT)

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காதலிக்க மறுத்த பெண் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை,
 
காதலிக்க மறுக்கும் பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்படும் கொடூரமான சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதுபோன்ற கொடூரமான சம்பவம் வள்ளியூரில் நடைபெற்றுள்ளது. இன்று மாலை துணிக்கடையில் பெண் ஒருவரை வாலிபர் வலுக்கட்டாயமாக பிடித்து மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் சரியும் பெண்ணை மீண்டும் முதுகு பகுதியில் குத்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் தடுக்க ஓடுவதற்குள் இச்சம்பவம் நடைபெற்றுவிட்டது. குத்திய இளைஞர் அங்கிருந்து ஓடும் காட்சிகள் சிசிடிவி கேரமாரவில் பதிவாகியுள்ளது. காயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது. 

Next Story