புயல் பாதித்த பகுதிகளில் கமல்ஹாசன் 2–ம் கட்ட ஆய்வு பயணம்


புயல் பாதித்த பகுதிகளில் கமல்ஹாசன் 2–ம் கட்ட ஆய்வு பயணம்
x
தினத்தந்தி 29 Nov 2018 5:28 PM GMT (Updated: 29 Nov 2018 5:28 PM GMT)

புயல் பாதித்த பகுதிகளில் கமல்ஹாசன் 2–ம் கட்ட ஆய்வு பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை, 

மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தமிழகத்தில் ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் கடந்த வாரம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதற்கட்டமாக நேரில் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொண்டார்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கமல்ஹாசன் தனது இரண்டாம் கட்ட பயணத்தை தொடர்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும், தமிழக மக்களுடனும் தோளோடு தோள் நின்று உதவிய அனைவருக்கும் நன்றி. நாங்கள் வேண்டுகோள் விடுத்த 24 மணி நேரத்துக்குள் புயல் நிவாரண உதவியாக ரூ.10 கோடியை அளித்த கேரளா அரசுக்கும் நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story