டிச. 5-ம் தேதி ஜெயலலிதா நினைவு நாள்: பன்னீர்செல்வம் - பழனிசாமி தலைமையில் ஊர்வலம்


டிச. 5-ம் தேதி ஜெயலலிதா நினைவு நாள்: பன்னீர்செல்வம் - பழனிசாமி தலைமையில் ஊர்வலம்
x
தினத்தந்தி 30 Nov 2018 3:03 PM GMT (Updated: 30 Nov 2018 3:03 PM GMT)

முன்னாள் முதல்-அமைச்சர் டிசம்பர் 5-ம் தேதி நினைவு நாளையொட்டி பன்னீர்செல்வம், பழனிசாமி தலைமையில் ஊர்வலம் நடைபெற உள்ளது.

சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு, தமிழக முதல்-அமைச்சராக பதவியில் இருக்கும்போதே, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அங்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது 2-ம் ஆண்டு நினைவு தினம் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் டிச. 5-ம் தேதி ஜெயலலிதா நினைவுநாளை முன்னிட்டு சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ஊர்வலம் நடைபெற உள்ளது. சென்னை அண்ணாசாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஊர்வலமாக சென்று மலரஞ்சலி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

Next Story