எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு


எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2018 10:22 AM GMT (Updated: 5 Dec 2018 10:22 AM GMT)

இலக்கியத்திற்கான உயரிய சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

இலக்கியத்திற்கான உயரிய விருதான  சாகித்ய அகாடமி விருது சஞ்சாரம் என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

30 ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகில் பணியாற்றி வரும் இவர் விருதுநகரின் மல்லாங்கிணறை பூர்வீகமாக  கொண்டவர்.  சென்னையில் தற்பொழுது வசித்து வருகிறார்.  கடந்த 1984ம் ஆண்டில் இருந்து சிறுகதை, நாவல் ஆகியவற்றை எழுதி வருகிறார்.

இந்த நாவல், நாதஸ்வர கலையின் சிறப்பம்சங்கள், கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியல் பற்றி எடுத்துரைக்கும் வகையில் எழுதப்பட்டு உள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் பாபா, விஷால்  நடித்த சண்டக்கோழி, மாதவன் நடித்த ரன் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

Next Story