சாகித்ய அகாடமி விருது பெற்ற மகிழ்ச்சியை நாதஸ்வர கலைஞர்களுடன் பகிர்ந்து கொள்வேன்; எஸ். ராமகிருஷ்ணன்


சாகித்ய அகாடமி விருது பெற்ற மகிழ்ச்சியை நாதஸ்வர கலைஞர்களுடன் பகிர்ந்து கொள்வேன்; எஸ். ராமகிருஷ்ணன்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:48 AM GMT (Updated: 5 Dec 2018 10:48 AM GMT)

சாகித்ய அகாடமி விருது பெற்ற மகிழ்ச்சியை நாதஸ்வர கலைஞர்களுடன் பகிர்ந்து கொள்வேன் என எஸ். ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய சாகித்ய அகாடமி விருது கடந்த 1954ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இந்திய மொழிகளில் வெளியாகும் மிக சிறந்த புத்தகங்களை எழுதியவர்களில் ஒருவரை தேர்வு செய்து ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும்.  இந்த விருதுடன், பதக்கம் மற்றும் ரூ.1 லட்சத்திற்கான பணமும் பரிசாக வழங்கப்படும்.

இந்திய எழுத்துலகில் சிறந்தவர்களை அங்கீகரிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் மற்றும் புதிய விசயங்களை ஏற்கும் வகையில் விருதின் நோக்கம் அமைந்துள்ளது.

இந்த நிலையில், இலக்கியத்திற்கான உயரிய சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு இன்று அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி விருது பெற்ற அவர் கூறும்பொழுது, 25 ஆண்டுகளாக எழுத்துலகில் இருக்கும் எனக்கு இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  இந்த விருது பெற்ற மகிழ்ச்சியை நாதஸ்வர கலைஞர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பற்றி பேசும் வகையில் எனது இந்த சஞ்சாரம் என்ற நாவல் அமைந்துள்ளது.  நாதஸ்வர கலைஞர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடி இதனை எழுதியுள்ளேன்.

நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வில் நிகழும் துயரங்களை வைத்து இந்த நாவலை எழுதினேன்.  இதனை எழுதி முடிக்க எனக்கு ஒன்றரை ஆண்டுகள் ஆனது என அவர் கூறியுள்ளார்.

Next Story