வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம்; கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார்


வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம்; கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார்
x
தினத்தந்தி 9 Dec 2018 4:50 AM GMT (Updated: 9 Dec 2018 4:50 AM GMT)

வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம் என கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம்.  ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை.  தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை.  நாங்கள் சகோதரர்கள் என கூறினார்.

மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பயனளிப்பதாக இருக்கும்.  இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம்.

கர்நாடக மக்களுக்கு குடிநீர் தரவேண்டியது எங்கள் கடமை.  எனவே அணை கட்டுவதில் உறுதியாக உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story