பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 22 Dec 2018 8:27 PM GMT (Updated: 22 Dec 2018 8:27 PM GMT)

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

கரூர், 

கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

போக்குவரத்து கழகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை ஏதும் இல்லை. ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு போன்றவற்றை சமாளித்துதான் போக்குவரத்து கழகத்தை இயக்கி வருகிறோம். தேவையில்லாத இடங்களில் பணியாற்றுபவர்களை தேவையுள்ள இடங்களில் பணி மாற்றம் செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story