ராகுல் வருக, நல்லாட்சி தருக என நாங்கள் சொல்லாமல் யார் சொல்வார்கள் - ஸ்டாலின் பேச்சு


ராகுல் வருக, நல்லாட்சி தருக என நாங்கள் சொல்லாமல் யார் சொல்வார்கள் -  ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 23 Dec 2018 9:50 AM GMT (Updated: 23 Dec 2018 9:50 AM GMT)

ராகுல் வருக, நல்லாட்சி தருக என நாங்கள் சொல்லாமல் யார் சொல்வார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

செஞ்சியில் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

ராகுல் வருக, நல்லாட்சி தருக என நாங்கள் சொல்லாமல் யார் சொல்வார்கள்.  நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ராகுல் காந்தியை முன்மொழிந்ததில் என்ன தவறு?; ராகுலை வேண்டாம் என எந்த தலைவர்களும் கூறவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பிரதமர் மோடி வராதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

Next Story