7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - அற்புதம்மாள்


7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் -  அற்புதம்மாள்
x
தினத்தந்தி 23 Dec 2018 2:01 PM GMT (Updated: 23 Dec 2018 2:01 PM GMT)

7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

சென்னை,

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:

7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், அப்போதுதான் தீர்வு கிடைக்கும். 7 பேர் விடுதலையில் காலம் கடத்தப்பட்டு வருவது, மத்திய அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 7 பேர் விடுதலைக்கும், ராஜீவ் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொடர்பில்லை என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநரே முடிவு செய்யலாம். 2016-ல் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனு குறித்து அவரே முடிவெடுக்கலாம். முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story