16 நிறுவனங்கள் விரிவாக்க முதலீட்டிற்கு ரூ12,000 கோடி தமிழக அமைச்சரவை ஒப்புதல்


16 நிறுவனங்கள் விரிவாக்க முதலீட்டிற்கு ரூ12,000 கோடி தமிழக அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 24 Dec 2018 8:45 AM GMT (Updated: 24 Dec 2018 8:45 AM GMT)

இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 16 நிறுவனங்களின் விரிவாக்க முதலீட்டிற்கு ரூ.12,000 கோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை  சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடியது  கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட  அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேகதாது விவகாரம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு அனுமதி குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளபட்டது.

16 தொழில்நிறுவனங்கள் ரூ.12 ஆயிரம் கோடியில் முதலீடு செய்ய தமிழக அமைச்சரவை நிர்வாக ரீதியாக ஒப்புதல்  அளித்து உள்ளது. தொழில்துறை விரிவாக்கத்துக்கு அமைச்சரவை அளித்த ஒப்புதல் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது .

Next Story