சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது


சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது
x
தினத்தந்தி 24 Dec 2018 2:30 PM GMT (Updated: 24 Dec 2018 2:30 PM GMT)

சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சம்பள முரண்பாடுகளை களையக் கோரி தமிழக அரசுடன், இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.  பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து,  இன்றிரவு முதல் டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.  போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டிபிஐ வளாகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டது.  700-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், சம்பள முரண்பாடுகளை களையக் கோரி, சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.   இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் உட்பட 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Next Story