கரிசல் மண்ணை அகற்றிவிட்டு தாமரையை மலர வைப்போம் தமிழிசை சவுந்தரராஜன் சொல்கிறார்


கரிசல் மண்ணை அகற்றிவிட்டு தாமரையை மலர வைப்போம் தமிழிசை சவுந்தரராஜன் சொல்கிறார்
x
தினத்தந்தி 24 Dec 2018 7:53 PM GMT (Updated: 24 Dec 2018 7:53 PM GMT)

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

ஆலந்தூர்,

கஜா புயல் மீட்பு பணி உள்பட நிவாரண பணிகளில் பிரதமருக்கு தொடர்பு உள்ளது. ஆனால் பிரதமர் எதையும் கண்டுகொள்ளவில்லை என்பது போல் ஒரு தோற்றத்தை ஸ்டாலின் உள்பட சிலர் ஏற்படுத்துகின்றனர். அரசாங்கம் முழுமையாக செயலாற்றி வருகின்றது.

கருஞ்சட்டை மாநாடு போட்டு கரிசல் மண்ணில் தாமரை மலராது என்று கூறுகின்றனர். கரிசல் மண்ணை நாங்கள் அப்புறப்படுத்தி தண்ணீரை வரவழைத்து தாமரையை மலர வைப்போம்.

தமிழகத்தில் ரூ.1,300 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை வரஉள்ளது. சாமானிய மக்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்க உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? நல்லதை ஏற்க பழகி கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் அரசியலாக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story