கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாட்டம்


கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2018 7:17 AM GMT (Updated: 25 Dec 2018 7:17 AM GMT)

கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது.

சென்னையில் சாந்தோம் மற்றும் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம், திருச்சி பாலக்கரை சகாயமாதா பேராலயம், மதுரை கீழவாசல் செயின்ட் மேரீஸ் ஆலயம்,  வேளாங்கண்ணி தூய ஆரோக்ய மாதா ஆலயம்,  தஞ்சை தூய இருதய பேராலயம், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மூபெரும் இறைவன் தேவாலயம், கோவை டவுன்ஹால் மைக்கேல் தேவாலயத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இயேசு பிறப்பை பறைசாற்றும் வகையில் மாட்டு குடில் அமைக்கப்பட்டிருந்தது. இயேசுவின் புகழை பாடும் பாடல்கள் பாடப்பட்டன. பேராயர்களும், பங்குத் தந்தைகளும், பாதிரியார்களும் சிறப்பு வழிபாட்டை வழிநடத்தினர்.

Next Story