200 ரூபாய்க்காக கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கல் நெஞ்சம் கொண்ட கணவர்


200 ரூபாய்க்காக கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கல் நெஞ்சம் கொண்ட கணவர்
x
தினத்தந்தி 26 Dec 2018 2:44 PM GMT (Updated: 26 Dec 2018 2:44 PM GMT)

200 ரூபாய் பணத்துக்காக கர்ப்பிணி மனைவியை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சுபிதா. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 3-வது முறையாக சுபிதா கர்ப்பமடைந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன் தான் வைத்திருந்த 200 ரூபாயை காணவில்லை என கூறிய மணிகண்டன், மனைவி சுபிதாவை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.   இதில் படுகாயமடைந்த சுபிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மணிகண்டன் ஏற்கனவே தனது தாய் பேபியிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது 5 மாத கர்ப்பிணி மனைவியையும் அடித்தே கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story