எச்ஐவி வைரஸ் குழந்தையை பாதிக்காமல் இருக்க சிகிச்சை அளித்து வருகிறோம் -மதுரை அரசு மருத்துவமனை டீன்


எச்ஐவி வைரஸ் குழந்தையை பாதிக்காமல் இருக்க சிகிச்சை அளித்து வருகிறோம் -மதுரை அரசு மருத்துவமனை டீன்
x
தினத்தந்தி 27 Dec 2018 5:58 AM GMT (Updated: 27 Dec 2018 5:58 AM GMT)

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் எச்ஐவி வைரஸ் குழந்தையை பாதிக்காமல் இருக்க சிகிச்சை அளித்து வருகிறோம் என மதுரை அரசு மருத்துவமனை டீன் கூறி உள்ளார்.

மதுரை

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் குறித்து பெண்ணுக்கு சிகிச்சை அளித்துவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் கூறியதாவது:-

மகப்பேறு மருத்துவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எச்ஐவி வைரஸ் குழந்தையை பாதிக்காமல் இருக்க சிகிச்சை அளித்து வருகிறோம். குழந்தைக்கு தொற்று ஏற்படாமல் காப்பாற்றிவிடுவோம் என நம்பிக்கை உள்ளது.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழங்கி வருகிறோம். பிரசவம் ஆகும் வரை அந்தப் பெண் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என கூறினார்.

Next Story