விவசாயிகளுக்கு எதிராக எப்போதும் அதிமுக அரசு செயல்படாது -அமைச்சர் தங்கமணி


விவசாயிகளுக்கு எதிராக எப்போதும் அதிமுக அரசு செயல்படாது -அமைச்சர் தங்கமணி
x
தினத்தந்தி 27 Dec 2018 10:12 AM GMT (Updated: 27 Dec 2018 10:12 AM GMT)

உயர் மின்கோபுரம் அமைப்பது தொடர்பாக விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக எப்போதும் அதிமுக அரசு செயல்படாது என அமைச்சர் தங்கமணி கூறினார்.

சென்னை

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும்.

பொங்கல் முடிந்த பிறகு, கஜா புயல் பாதித்த பகுதிகளில் பணியாற்றிய 26 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். 

புயல் பாதிப்பு பகுதிகளில் இன்னும் 3 நாட்களில் விவசாயத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.

உயர் மின்கோபுரம் அமைப்பது தொடர்பாக விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக எப்போதும் அதிமுக அரசு செயல்படாது என கூறினார்.

Next Story