12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு


12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு
x
தினத்தந்தி 27 Dec 2018 12:26 PM GMT (Updated: 27 Dec 2018 12:26 PM GMT)

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களை தவிர்த்து மற்ற அனைத்து பாட தேர்வுகளுக்கும் அரைமணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.

வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12-ம் பொதுத்தேர்வு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல், வணிகக்கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 10 முதல் 1.15 மணி வரை நடைபெற்ற தேர்வு, தற்போது 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மொத்தம் 1200 மதிப்பெண்களாக இருந்த நடைமுறை கடந்த ஆண்டு முதல் 600 மதிப்பெண்களாக (6 பாடத்திற்கு தலா 100 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டது குறிப்பித்தக்கது. அதே நேரத்தில் மறுதேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு பழைய நடைமுறை பொருந்தும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story