14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் கருப்பணன்


14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது -  அமைச்சர் கருப்பணன்
x
தினத்தந்தி 28 Dec 2018 10:32 AM GMT (Updated: 28 Dec 2018 11:56 AM GMT)

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கருப்பணன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

மறுசுழற்சி செய்யமுடியாத, ஒரு முறையே பயன்படுத்தப்படும் ‘பிளாஸ்டிக்‘ பைகள் உள்ளிட்ட பொருட்களை வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பயன்படுத்த தடை விதித்து, தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையின்படி, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது என உத்தரவிட்டது.

இந்நிலையில்,  அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிளாஸ்டிக் பை தடைக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது, வியாபாரிகள் அச்சப்பட வேண்டாம். சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக்கில் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் என தெரிவித்தார்.

Next Story