அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது - முதல்-அமைச்சர் பழனிசாமி


அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது - முதல்-அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 28 Dec 2018 1:53 PM GMT (Updated: 28 Dec 2018 1:53 PM GMT)

அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது என்று முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கில் இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர் மற்றும் முற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் எழுதிய ‘COFFEE TABLE' புத்தகத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட டோனி பெற்றுக்கொண்டார். 

புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

சிறந்த தொழிலாளியாக இருப்பவரே, சிறந்த தொழிலதிபராக உயரமுடியும் என்பதற்கு சீனிவாசன் உதாரணம். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு 30 நாட்களில் அனுமதி வழங்கப்படும்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.  அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story