மாநில செய்திகள்

தமிழகம், புதுவையில் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு + "||" + Tamil Nadu Within 24 hours Light rainfall in one or two places

தமிழகம், புதுவையில் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம், புதுவையில் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை

சென்னை வானிலை மையம்  கூறி உள்ளதாவது:- 

வடகிழக்கு பருவ காற்று லேசாக தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக,  ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். சென்னையில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக வால்பாறையில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சங்கரன்கோயில் , நாங்குநேரி பகுதியில் தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...