நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உறுதி


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உறுதி
x
தினத்தந்தி 29 Dec 2018 9:00 PM GMT (Updated: 29 Dec 2018 8:39 PM GMT)

ஹலோ எப்.எம். 106.4-ல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு தொகுப்பாளர் ராஜசேகருடன் உரையாடுகிறார்.

சென்னை,

அப்போது அவர் பேசுகையில், சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் மனித குலமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதில், தவறு செய்தவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், அரசின் வரி வருவாயில் 82 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு தான் செல்கிறது என்பதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து வருகிறது. ஜெயலலிதா-மோடி நட்பு அனைவரும் அறிந்த விஷயம். கூட்டணியை பொறுத்தவரை ஜெயலலிதா காட்டிய வழி வேறு. அவர் காட்டிய வழியில் தான் அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும். அதன்படி நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது.

ஜெயலலிதாவைவிட சிறப்பாக செயல்பட்டு நல்லாட்சியை எடப்பாடி பழனிசாமி கொடுத்து வருகிறார். இதுதான் ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்க்கும் என்றார். இதேபோல் தொகுப்பாளரின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில் அளித்து உள்ளார்.

Next Story