மருத்துவமனையில் அன்பழகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்


மருத்துவமனையில் அன்பழகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்
x
தினத்தந்தி 30 Dec 2018 9:47 AM GMT (Updated: 30 Dec 2018 10:54 AM GMT)

திமுக பொது செயலாளர் அன்பழகனின் உடல் நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.

சென்னை,

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் (வயது 96), வயது முதிர்வு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றார். அந்த விழாவிலும் அவரால் முழுமையாக இருக்க முடியவில்லை.

இந்தநிலையில், 28-ம் தேதி  க.அன்பழகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சளித்தொல்லையால் மூச்சுவிட சிரமப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். குழாய் மூலம் சளி வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அவரை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். 

Next Story