திருவாரூர் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் எஸ்.காமராஜ் போட்டி - டிடிவி தினகரன் அறிவிப்பு


திருவாரூர் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் எஸ்.காமராஜ் போட்டி - டிடிவி தினகரன் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Jan 2019 10:43 AM GMT (Updated: 4 Jan 2019 10:43 AM GMT)

திருவாரூர் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

சென்னை,

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முக்கிய பங்கு வகிப்பதால் அதிகமான சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட களம் இறங்குகின்றனர்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளருக்கான நேர்காணலை நடத்தி வருகிறது. இதனால் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் என பெரும் எதிர்ப்பார்ப்பு தொகுதி மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. 

திருவாரூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 2 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருவாரூர் தொகுதி கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் எந்த ஆடம்பரமும் இல்லாமல் பிரசாரம் செய்வோம். பணம், பொருள் கொடுப்பதால் மக்களை விலைக்கு வாங்கிவிட முடியாது. இடைத்தேர்தலுக்கு எந்த கட்சிகளோடும் கூட்டணி தொடர்பாக பேசவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில கட்சிகளோடு பேசி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story