இந்தியை தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளது - சுஷ்மா சுவராஜ்


இந்தியை தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளது - சுஷ்மா சுவராஜ்
x
தினத்தந்தி 5 Jan 2019 8:50 AM GMT (Updated: 5 Jan 2019 9:18 AM GMT)

இந்தி மொழியை தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளதாக,மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள தட்சிண பாரத் இந்தி பிரசார சபாவில், 82வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தி பிரச்சார சபா தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்க எல்லா தகுதியும் உள்ளது. இந்தி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு முன்பு இருந்ததாகவும் தற்போது பல்வேறு துறைகளில் அந்த நிலை மாறி விட்டதாகவும் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரலில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார். 

Next Story