திருவாரூர் திமுக கோட்டை, தற்போது அதிமுக கோட்டையாக மாறியுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ


திருவாரூர் திமுக கோட்டை, தற்போது அதிமுக கோட்டையாக மாறியுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 6 Jan 2019 12:55 PM GMT (Updated: 6 Jan 2019 12:55 PM GMT)

திருவாரூர் தொகுதி திமுக கோட்டை என்று சொல்ல முடியாது, தற்போது அதிமுக கோட்டையாக மாறியுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சென்னை,

மதுரை மாவட்டத்தில் 100 கோடி  ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மதுரை ஜீவா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

மக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பை பெறும் வகையில், ஜனவரி 14 ம் தேதி அரசு விடுமுறை என்ற போதும், அன்று நியாய விலை கடை திறந்தே இருக்கும் என்றும் குறிப்பிட்டார். திருவாரூர் தொகுதி திமுக கோட்டை என்று சொல்ல முடியாது,  தற்போது அதிமுக கோட்டையாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.

Next Story