தமிழகத்தில் அடுத்த 6 தினங்களுக்கு கடும் குளிருடன் பனிமூட்டம் நீடிக்கும்


தமிழகத்தில் அடுத்த 6 தினங்களுக்கு கடும் குளிருடன் பனிமூட்டம் நீடிக்கும்
x
தினத்தந்தி 6 Jan 2019 1:47 PM GMT (Updated: 6 Jan 2019 1:47 PM GMT)

தமிழகத்தில் அடுத்த 6 தினங்களுக்கு கடும் குளிருடன் பனிமூட்டம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவானது. இதற்கு ‘பபுக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ‘பபுக்’ புயல் அந்தமான் தீவுகளை அடைகிறது. புயல் அந்தமானில் கரையை கடந்த பின்பு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் கடற்கரை நோக்கி சென்று 7 அல்லது 8-ந்தேதி வாக்கில் வலுவிழக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 6 தினங்களுக்கு கடும் குளிருடன் பனிமூட்டம் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் வெப்பநிலை 30 டிகிரியாக இருக்கும்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள பபுக் புயல், இன்று இரவு அந்தமானில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அப்போது மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story