மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை + "||" + 11 fishermen arrested by Sri Lankan Navy

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை
தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
ராமேஸ்வரம்,

இலங்கை கடற்பகுதியில் எல்லை கடந்து மீன்பிடித்தனர் என கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சமீபத்தில் கைது செய்திருந்தது.

இந்த நிலையில், கிளிநொச்சி அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது.  இவர்கள் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆவர்.  அவர்களிடம் இருந்து படகுகள், வலைகள் உள்ளிட்டவற்றையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.